×

காதல் தேவதையை தேடும் ஆர்யா!!

சினிமாவில் உள்ள தற்போதைய ஹீரோக்களில், நடிகைகளிடம் அதிக நட்போடு பழகுபவர் ஆர்யா. அதனாலேயே அவ்வப்போது அவர் கிசுகிசுக்களில் சிக்கியும் வருகிறார். அதோடு, சில சினிமா மேடைகளில் அவரது நட்பு வட்டார நடிகர்களே, நடிகைகளுடன் அவரை இணைத்து சிக்க வைத்து விடுகிறார்கள். இதனாலும் ஆர்யாவின் பெயர் எக்கச்சக்கமாக சிக்கி சிதைந்து கிடக்கிறது.

இந்த நிலையில் இருந்து மாற வேண்டும் என்று தற்போது உறுதி எடுத்துள்ளாராம் ஆர்யா. வீடடில் பெண் பார்க்கிறார்கள் என்றதும், நயன்தாராவுடனான நெருக்கத்தை கூட தள்ளி வைத்து விட்டார்.அதனாலேயே மற்ற நடிகைகளுடனான நட்பையும் குறைத்து கொண்டிருகிறாராம். ஆக, இப்போது ரொம்ப நல்ல பிள்ளையாகி விட்டார் ஆர்யா . இருப்பினும், இன்னும் ஆர்யாவுக்குகேற்ற பெண் அமையவில்லையாம் அவரது பெற்றோர் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்,   "எனக்கு காதல் கல்யாணம் தான் செட்டாகும்  " என்று சொல்லிக்கொள்ளும் ஆர்யாவும், தனது காதல் தேவதையை தேடிக்கொண்டு அலைகிறாராம்.

இது பற்றி கேட்கும் நண்பர்களிடமும், சீக்கிரம் செட்டாகிடும் பாஸ் என்றும் நம்பிக்கை சொல்கிறாராம்.