×

கோலி சோடா திரைவிமர்சனம்!!

கோயம்பேடு மார்க்கெட்டுல ஆரம்பிக்குது கதை. அங்க மூட்டை தூக்கி பொழைக்கிற நாலு அனாதை பசங்க கிஷோர், பாண்டி, ஸ்ரீராம், முருகேஷ். இவுங்க எப்படியாவது வாழ்க்கையில முன்னேறி பெரிய ஆளா வரணும்னு ஒரு ஆசை. அந்த பசங்களுக்கு ஆதரவா மார்க்கெட்ல கடை வச்சிருக்கிற ஆச்சி (சுஜாதா) அதுக்கு உதவி செய்யுறாங்க. கோயம்பேடு மார்க்கெட்ல கந்து வட்டி ராஜ்ஜியம் பண்ற நாயுடுவோட பழைய குடோனை வாடகைக்கு வாங்கி டிபன் கடை வச்சி தர்றாங்க ஆச்சி. ஆச்சி டிபன் கடை’யா அங்க உருவாக்கி பெருசா வளர ஆரம்பிக்கிறாங்க பசங்க.
ஒருநாள் நாயுடு அடியாள் மயில் குடித்து விட்டு டிபன் கடையில் வந்து கலாட்டா செய்ய, இதனால் பசங்க மயிலை அடித்து துரத்தி விடுகின்றனர். இதை ஒரு கௌரவ பிரச்சினையா நினைக்கிற நாய்டு, பசங்களை அடித்து உதைத்து பிரித்து விரட்டி விடுகிறான். பிரிந்து போன நால்வரும் ஒன்று சேர்ந்து நாயுடுவின் சூழ்ச்சிகளை ஒழித்து மீண்டும் கடையை நடத்துவதே கோலி சோடா..

டிராமா மாதிரி இருக்கிற கதையை ரொம்ப சரியாகக் கையாண்டிருக்கிறார் இயக்குனர். படத்தின் இறுதியை வித்தியாசமாக முடித்து கைதட்டல் வாங்குகிறார் இயக்குனர் எஸ்.டி.விஜய் மில்டன். படம் முழுக்க தனித்துவ வசனத்தில் ரொம்ப இடங்களில் கை தட்டல் பெறுகிறார் இயக்குனார் பாண்டிராஜ்.

கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் என ‘பசங்க’ படத்தில் 4 பெரும் தான் ஹீரோ. ரொம்ப சரியான தேர்வு. ஆச்சி’யாக சுஜாதா, ஆச்சியின் மகள் ‘யாமினி’யாக வரும் சாந்தினி, ‘மந்திரவாதி’ இமான் அண்ணாச்சி, சோடாபுட்டி பொண்ணு சீதாலட்சுமி, ‘லோகு’வாக நடித்திருக்கும் அழகர்சாமி முத்து, எல்லோரையும் விட கலக்கி இருக்கும் நாயுடுவாக வரும் மதுசூதன். மார்க்கெட்டில் நடக்கும் ஷூட்டிங்கில் வந்து கலக்கும் சாம் ஆண்டர்சனும் சிரிக்க வைக்கிறார்.

நடிகர்கள் மட்டுமல்ல, தொழில் நுட்ப கலைஞர்களும் எல்லா இடத்திலும் பாராட்டு பெறுகிறார்கள். ஒளிப்பதிவாளராகவும் ‘சபாஷ்’ பெறுகிறார் இப்பட இயக்குனர் விஜய் மில்டன். பாடல்களுக்கு எஸ்.என்.அருணகிரி, பின்னணி isaiக்கு சீலின் என இரண்டு இசையமைப்பாளர்கள், இருவருமே அவங்க வேலையை நல்லா செஞ்சு இருக்காங்க. கானா பாலாவின் ஆறு அடி வீடு பாடல் ரசிகர்களை மகிழ்விக்கும். ரொம்ப ஷார்ப்பா படத்தை கொடுத்த எடிட்டர் ஆண்டனிக்கு ஒரு தனி பாராட்டு.
இது எல்லாம் நடக்குமா, என்று அடிக்கடி என்ன தோன்றினாலும், படத்தின் திரைக்கதை அதை மறக்கடித்து விடுகிறது. கோலி சோடா, வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களுக்கு ஒரு பாடம். இயல்பான படம் விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு நல்ல தேர்வு.

கோலி சோடா, பெரிய, பெரிய பட்ஜெட் படங்களை கண்டு கண்டு வெறுத்து போன ரசிகர்களின் அஜீரணம் போக்க வந்திருக்கிறது எனலாம்..

கோலி சோடா, ஜாலி சோடா தான்..