×

அதிரடியில் இறங்கும் ப்ரியாமணி!

பருத்திவீரன் படத்தின் முலம் மிக சிறந்த நடிப்பை வெளிபடுத்தி தேசிய விருது பெற்றவர் நடிகை ப்ரியாமணி. அனாலும் அந்த படத்திற்கு பிறகு தமிழில் அவருக்கு பெரிதாக படம் எதுவும் அமைய வில்லை. இதனால் தெலுகு படங்களில் நடிக்க தொடங்கினார் அங்கும் சரியான இடம் கிடைக்கததால் இந்திக்கு செல்ல, ஷாருக்கான் நடித்த, சென்னை எக்ஸ்பிரஸ் படம் மூலம் அஸ்திவாரம் போட்டார். அந்த திட்டமும் ஒர்க் அவுட் ஆகவில்லை.
அதனால், தற்போது, ஒரு கன்னட படத்தில், சி.பி.ஐ., அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இதுவரை தான் நடிக்காத அதிரடியான வேடம் என்பதால், இந்த ரோலுக்காக, தன்னை கவர்ந்த சில பெண் சி.பி.ஐ., அதிகாரிகளை, ரோல் மாடலாக வைத்து நடிப்பதாக கூறுகிறார்.

இனி, மென்மையான வேடங்களை தவிர்த்து, அதிரடியான வேடங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்போவதாக சொல்கிறார்.