×

ப்ருத்விராஜ்-பிரியாமணி ஜோடி சிக்ஸர் !

பிருத்விராஜ் மலையாளத்தில் அடுத்து நடிக்கும் படம் ‘பெயிண்ட்டிங் லைஃப்’. இந்தப்படத்தை இயக்குகிறார் டாக்டர்.பைஜு. இவர் ஏற்கெனவே பிருத்விராஜை வைத்து இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். இது இருவரும் இணையும் மூன்றாவது படம்.
மேலும் படத்தில் பிருத்விராஜுக்கு ஜோடியாக பிரியாமணி நடிக்கிறார். இதன் மூலம் இருவரும் ஆறாவது முறையாக ஜோடி சேர்ந்து சிக்ஸர அடித்துள்ளார். இதற்கு முன்பு இருவரும் மலையாளத்தில் மூன்று, தமிழில் இரண்டு என ஐந்து படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இதில் பிருத்விராஜ் திரைப்பட இயக்குனராக வருகிறார். அவருக்கு ஜோடியாக வரும் பிரியாமணி டூரிஸ்ட் ஆக நடிக்கிறார். ஒரு கிராமத்தில் சந்திக்கும் இவர்கள் இருவரின் வாழ்க்கையில், அதன்பின் ஏற்படும் மாற்றங்களைத்தான் அழகான ‘பெயிண்ட்டிங் லைஃப்’ ஆக மாற்ற இருக்கிறார் டாக்டர். பைஜு.