"ஈரம் படத்திற்கு பிறகு இயக்குனர் அறிவழகனின் மற்றொரு படைப்பாக வெளிவந்திருக்கும் படம் வல்லினம். இப்படத்தை ஆஸ்கார் பிலிம் வி.ரவிச்சந்திரன் தயாரித்து இருக்கிறார். விளையாட்டு என்றால் கிரிக்கெட் மட்டும் தான் என்று, மாயயாகி போன இந்த காலத்தில், கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்ற நல்ல கருத்தை மிகவும் தெளிவாகவும் அழகாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
திருச்சியில், "பி.சி.ஏ., படிக்கும் நகுலன், சிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரராக திகழ்கிறார். ஒருநாள் போட்டியில் மைதானத்தில் நகுலன் வீசும் பந்து, இதயபலவீன நண்பர் கிருஷ்ணாவின் உயிரை பறிக்கிறது. நண்பனின் மரணத்தால் மனமுடைந்து போகிறார் நகுலன். கிருஷ்ணா இதய பலவீனத்தால் தான் இறந்தார் என கோட்ச் ஆதி, எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல், அன்று முதல் பேஸ்கட்பாலை தொடுவது இல்லை...என்று சபதம் செய்கிறார், மேலும் திருச்சி கல்லூரியில் இருந்து மாற்றம் வாங்கி, சென்னையில் உள்ள நேஷனல் கல்லூரியில் தன் படிப்பை தொடர்கிறார்.
இந்த கல்லூரியில் மிருதுளாவின் காதலும், அம்ஜத்தின் நட்பும், ஜெகனின் காமெடி தோழமையும் கிடைக்கிறது. கூடவே அந்த நேஷனல் கல்லூரியே கொண்டாடும் வகையில் இரண்டு ஆண்டுகளாக அந்த கல்லூரிக்கே கிரிக்கெட்டில் வெற்றி கோப்பை வாங்கி தந்திருக்கும் சீனியரான கிரிக்கெட் டீம் கேப்டனுடனும் அவர் தலைமையிலான கிரிக்கெட் டீமுடனும் முட்டலும் மோதலும் ஏற்படுகிறது.
தன் நண்பர்களான குணா, ஜெகன் மற்றும் அவர்களது டீம் வெற்றிக்கனியை தட்டிபறிக்க முடியாத கூடைப்பந்தாட்ட வீரர்களாக இருகிறார்கள் இவர்களது எதிராளிகளோ வெற்றிகரமான கிரிக்கெட் விளையாட்டு வீரர்களாக இருக்கும் நிலையில், நண்பனின் மரணத்தால் கூடைப்பந்து விளையாட்டை கைவிட்ட நகுலன், நண்பர்களின் வெற்றிக்காக மீண்டும் கூடைப்பந்தை கையில் எடுக்கிறார்.
அதுநாள் வரை கிரிக்கெட்டிற்காக பேசப்பட்ட நேஷனல் கல்லூரி, கூடைப்பந்திற்காக பதக்கம் பெற்றதா? நகுலனும், நண்பர்களும் மாநில அளவில் வெற்றி பெற்றார்களா? என பல விஷயங்களை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் கலந்து கட்டி "வல்லினம் படத்தை வெற்றி இனம் ஆக்கியிருக்கிறார் இயக்குநர் அறிவழகன்!
நகுலன், கூடைப்பந்தாட்ட வீரராகவும் நட்பு, காதல், மோதல், பாசம் என எல்லாவற்றிலும் கைதேர்ந்த நடிகராக வளர்ந்திருக்கிரார். முந்தைய படங்களின் தோல்வியை "வல்லினம் வெற்றி மூலம் ஈடு கட்டிவிடுவார் என நிச்சயம் நம்பலாம்!
மீராவாக வரும் மிருதுளா குடும்ப பாங்கான பெண்ணாக வலம்வந்து இருக்கிறார் . குணாவாக வரும் அம்ஜத், சுந்தர், கோச்-அதுல் குல்கர்னி, அமைச்சர் சந்தான பாரதி, கல்லூரி முதல்வர் ஓய்ஜி மகேந்திரன், நாயகியின் தந்தையும், பெரும் தொழிலதிபருமான ஜெயப்பிரகாஷ், வில்லன் கிரிக்கெட் கேப்டன், அவரது அண்ணன் என எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
ஜெகனின் "அவுட்ஸ்டேண்டிங் பிளேயர்... எனும் அளவான காமெடி, ஒய் ஜி மகேந்திரன் , தன்னை மாணவர்கள் மிரட்டி சென்றதும் வீட்டிற்கு போன் செய்து, தன் மகளை கம்பியூட்டரில், டுவிட்டரில் இருந்து எழும்ப செய்வதும் தியேட்டரில் கைதட்டல் சிரிப்பு அதிர்வை ஏற்படுத்துகிறது. இது மாதிரி பல காட்சிகள் படத்தில் இடம் பிடித்திருப்பது "வல்லினம் படத்திற்கு பெரும்பலம்!
தமனின் இனிய இசை, கே.எம்.பாஸ்கரனின் அழகிய ஒளிப்பதிவு உள்ளிட்ட பிளஸ் பாயிண்ட்டுகளுடன், இயக்குநர் அறிவழகன், கிரிக்கெட்டிற்கு கிடைக்கும் முக்கியத்துவம் பிற விளையாட்டுகளுக்கு கிடைக்கும் வேண்டுமென ஒவ்வொரு காட்சியிலும் போராடியிருக்கும்.
கிரிக்கெட் டிற்கு அதிகம் முக்கியத்துவன் காட்டாத அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகள் உலகின் வல்லரசுகளாக வலம் வருவதையும் சொல்லாமல் சொல்லி இருக்கும் இயக்குநர் அறிவழகனின்
"வல்லினம் - வசூலில் வெல்லும் இனம்!