×

விஸ்வரூபம் திரைக்கு வருவது சந்தேகம்!!

விஸ்வரூபம் படத்தை இயக்கி வந்தபோதே விஸ்வரூபம் இரண்டாம் பாகம் சம்பந்தப்பட்ட பெருவாரியான காட்சிகளையும் படமாக்கியிருந்தார் கமல். அதனால் இரண்டாம் பாகம் படப்பிடிப்பை tpiuthf முடித்து விட்டார். ஆனால் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகளுககு அதிக Neuk; எடுத்துக்கொண்டு வருகிறார் கமல். அதனால் கோடை விடுமுறைக்கு விஸ்வரூபம் திரைக்கு வருவது சந்தேகம்தான் என்கிறார்கள்.
இந்த நிலையில், அந்த வேலைகளில் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க உத்தமவில்லனில் தற்போது தீவிரமடைந்திருக்கிறார் கமல். மூன்று மாதம் மொத்த கால்சீட்டாக கொடுத்து விறுவிறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஜூன் மாதம் முதல் த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்கிறார். உத்தமவில்லனைப்போலவே த்ரிஷயம் ரீமேக்கையும் மூன்று மாதங்களில் முடித்து விட திட்டமிட்டிருக்கும் கமல், விஸ்வரூபம் இரண்டாம் பாகம் படத்திற்கு இத்தனை காலஅவகாசம் எடுப்பது பற்றி விசாரித்தபோது, இந்த படங்களை விட அந்த படத்திற்கு கூடுதலான எதிர்பார்ப்பு நிலவி வருவதால், ஒவ்வொரு விசயங்களையும் பாத்து பாத்து செய்யும் கமல், அனிமேஷன் விசயங்களில் மிரட்டப்போகிறாராம்.

அதனால்தான், லேட்டாக படம் வந்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் என்று விஸ்வரூபம் படத்தின் மீது பிரத்யேக கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறாராம்.