×

ஏப்ரல் 4-ஆம் தேதி - மான் கராத்தே !!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் மான் கராத்தே.திருக்குமரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர். முருகதாஸ் கதை திரைக்கதை எழுதி இருக்க்கிறார்.எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இந்தப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.
சிவகார்த்திகேயன்-ஹன்சிகா இருவரும் ஜோடி சேரும் முதல் படம் இது. சூரி மற்றும் ‘எதிர்நீச்சல்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் காமெடியில் கலக்கிய சதீஷ் இந்தப் படத்திலும் நடிக்கிறார். படத்தை பார்த்த தணிக்கைஅதிகாரிகள் படத்தின் எந்த காட்சியிலும் கத்திரி போடாமல் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

படத்தில் ஆபாசம், வன்முறை எதுவுமின்றி இயக்கியுள்ளதாக திருக்குமரனுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். படம் கோடை விடுமுறையொட்டி வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதி ரிலிசாகவிருக்கிறது.