×

ஒன்றரை கோடி லைக்குளை தாண்டினார் - தீபிகா!!


கமல் மகள் அக்‌ஷராவுக்கும் பழைய நடிகை ரதியின் மகன் தனுஜ்வில்வானிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக மும்பையில் செய்தி பரவி உள்ளது. கமல்ஹாசனின் இளையமகள் அக்‌ஷரா தாய் சரிகாவுடன் மும்பையில் வசிக்கிறார்.ரதியின் மகன் தனுஜ் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். அக்ஷரா தனுஜ் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் செய்தி பரவி உள்ளது.
நடிகை ரதி 80 களில் ரதி தமிழ் படங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் இவர் கமலஹாசனுடன் இவர் நடித்த ஏக் துஜே ஹேலியா இந்தியில் பெரும் வரவேற்பை பெற்றது எனபது குறிப்பிடத்தக்கது. அக்‌ஷரா தற்போது இந்தியில் தனுஷுடன் நடித்து வருகிறார். இவர்கள் காதல் விவகாரம் தெரிந்து சரிகா அதிர்ச்சியாகி உள்ளார்.

சினிமாவில் முழு கவனமும் செலுத்தும் படியும் காதலில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்றும் மகளுக்கு அறிவுரை கூறி வருகிறார் சரிகா.

தீபிகா படுகோனே நடித்த மூன்று படங்களும் ஹிட்டானதைத் தொடர்ந்து அவரது பேஸ்புக்கிற்கு லைக்குள் குவிந்து இருக்கிறது. பாலிவுட் நட்சத்திரங்களில் பேஸ்புக்கில் பிசியாக இயங்கிக் கொண்டிருப்பவர் தீபிகா படுகோனே. இப்போது அவர் அமிதாப்பச்சான், ஷாருக்கான், சல்மான்கானை பின்னுக்கு தள்ளிவிட்டு யாரும் தொட முடியாத உயரத்தில் இருக்கிறார். சமீபத்தில் அவர் 15 மில்லியன் லைக்குளை தாண்டினார்.
தீபிகா தன் பேஸ்புக்கில் ஒரு மணிக்கு ஒரு முறை அப்டேட் செய்து கொண்டிருப்பதும் இதற்கு காரணம் என்கிறார்கள். கோச்சடையான் பாடல் மற்றும் டிரைய்லர் வெளியீட்டிற்கு பிறகு தீபிகாவின் பேஸ்புக்கில் லைக்குள் மழையாக கொட்டத் தொடங்கி விட்டது. மற்ற இந்தி நட்சத்திரங்கள் பத்து மில்லியனுக்கும் குறைவான லைக்குகளை பெற்று மிகவும் பின்தங்கி இருக்கின்றனர்.