×

த்ரிஷாவை கைப்பிடிக்க ராஜா வேஷம் போடும் விக்ரம்.!!

இரண்டு வருட காலமாக நடந்து கொண்டிருந்த "ஐ" படப்பிடிப்பில் இருந்து ஒருவழியாக வெளியே வந்துவிட்டார் விக்ரம். "ஐ" படம் முடியும் வரை வேறு படங்களில் ஒப்பந்தம் ஆகக்கூடாது என்ற கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்ட விக்ரம் மற்றும் எமி ஜாக்சன் ஆகிய இருவரும் எப்பொழுது இந்த படம் முடியும் என காத்திருந்தனர். ஒருவழியாக இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாக இயக்குனர் ஹரி கடந்த திங்கட்கிழமை அறிவித்தார்.

எனவே விக்ரம் தற்போது அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார். சுந்தர் சியிடம் உதவியாளராக இருந்து அதன் பின்னர் தேவைதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை, படிக்காதவன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய பூபதிபாண்டியன் விக்ரமின் அடுத்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு "ராஜா வேஷம்" என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

காமெடி மற்றும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே விக்ரமுடன் சாமி, பீமா போன்ற படங்களில் ஜோடி சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவரும் என இயக்குனர் பூபதிபாண்டியன் கூறினார்.