மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தயாரிக்கும் 'வடகறி' டீசர் இன்று வெளியானது. இதில் ஜெய், ஸ்வாதி ரெட்டி, ரேடியோ ஜாக்கி பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ஒரு குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார்.
விவேக் மற்று மெர்லின் இசையமைத்துள்ள இந்த படத்தை சரவண ராஜன் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்பிரமணியபுரம் என்ற மாபெரும் வெற்றிப்படத்தில் நடித்த ஜெய்-ஸ்வாதி இந்த படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளதால் ரசிகர்களிடம் இருந்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதாக கூறப்படுகிறது.
முதலில் இந்த படத்தில் யுவன்ஷங்கர் ராஜாதான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் ஒரு பாடல் மட்டும் இந்த படத்திற்காக கம்போஸ் செய்துவிட்டு, திடீரென படத்தில் இருந்து விலகியதால் விவேக்-மெர்லின் இசையமைப்பாளர்களான மாறினர். இவர்களை இயக்குனரிடம் அறிமுகப்படுத்தியது இளம் இசைப்புயல் அனிருத் என்பது பலருக்கும் தெரியாத தகவல் ஆகும்.