ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கத்தி படத்தின் டீஸர் வரும் ஏப்ரல் 14, தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என இன்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ், விஜய், சமந்தா நடிக்கும் கத்தி படத்தின் டீஸர் மற்று, பர்ஸ்ட் லுக் ஏப்ரல் 14, தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்றும், திரைப்படம் தீபாவளி திருநாளில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
விஜய்-முருகதாஸ் இணைந்த 'துப்பாக்கி' படம் 2012 தீபாவளி தினத்தன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பெயரை கத்தி என்று வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியதாக வந்த செய்தி குறித்து தெரிவித்த முருகதாஸ், இதுவரை தலைப்பு குறித்து எங்களிடம் யாரும் நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு முடிந்துவிட்டது என்றும், பாடல் வெளியிட்டு விழாவை சிங்கப்பூரில் ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.