×

பேஸ்புக்கில் ஒரு கோடி லைக்குகள் பெற்று சாதனை படைத்த பின்னணி பாடகி.!!

தேவதாஸ் என்ற பாலிவுட் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான ஸ்ரேயா கோஷல், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு கோடி லைக் பெற்று சாதனை படைத்துள்ளார். 

11 ஆண்டுகள் பாடகியாக இருந்தாலும் வெறும் 150 பாடல்களை மட்டுமே பாடியுள்ள ஸ்ரேயா, பணத்திற்காக குத்துப்பாடல்களையும், ஆபாச இரட்டை அர்த்தமுள்ள பாடல்களையும் என்னால் பாடமுடியாது என்றும் ஆத்ம திருப்தி ஏற்படும் பாடல்களை மட்டுமே தேர்வு செய்வதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல நிகழ்ச்சியில் பாடி வரும் ஸ்ரேயா, தனது ஃபேஸ்புக் கணக்கை தொடங்கிய சில நாட்களிலேயே பெரும் எண்ணிக்கையிலான லைக்க்குகள் பெற்றார். சமீபத்தில் அவருக்கு ஒரு கோடி லைக்கள் கிடைத்துள்ளது. இந்தியாவில் ஒரு கோடி லைக் பெற்ற வி.ஐ.பிகள் வெகு சிலரே. அவர்களில் ஒருவராக ஸ்ரேயா கோஷல் தன்னை இணைத்துக்கொண்டார்.

இதுமட்டுமின்றி ஸ்ரேயா கோஷலின் டுவிட்டர் தளத்தை சுமார் 27 லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனர்.

ஸ்ரேயா இதுவரை தமிழில் சுமார் 50 பாடல்கள்பாடியுள்ளார். இந்தியாவில் ஒரு பாடல் பாடுவதற்கு அதிக சம்பளம் பெறும் பெண் பாடகி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகியாக மட்டுமே இருந்து வந்த ஸ்ரேயா கோஷலை நடிக்க வைக்க பல முன்னணி இயக்குனர்கள் முயற்சி செய்தும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. என்னுடைய வேலை பாடல்களை பாடுவது மட்டும்தான். எனக்கு வாழ்க்கையிலும் சரி, திரையிலும் சரி நடிக்க வராது என்று கூறி வந்த வாய்ப்புகளை எல்லாம் மறுத்துவிட்டார் ஸ்ரேயா