முதல் படத்திலேயே ஆர்யா, நயன்தாரா என முன்னணி நடிகர்-நடிகைகளை வைத்து படம் இயக்கிய அட்லி, தனது அடுத்த படத்தை விஜய், அஜீத் போன்ற முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்கி மேல்தட்டு இயக்குனராகி விட வேண்டும் என்று முடிவு செய்து சில நடிகர்களிடமும் கதை சொல்லி வந்தார். அப்போது விஜய்யிடமும் ஒரு கதை சொன்னார் அது அவருக்கு பிடித்து விட்டதால் உடனடியாக தனக்கு கால்சீட் தரக்கூடும் என்று எதிர்பார்த்தார் அட்லி.
ஆனால், அவரோ, ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாசுடன் உடன்படிக்கை இருந்ததால் அவரது புதிய படத்தில் நடிக்கச்சென்று விட்டார். இருப்பினும், தனது இரண்டாவது படத்தில் விஜய் தான் நடிக்க வேண்டும் என்று காத்திருக்கும் அட்லி, விஜய்யை இயக்கிய பிறகு, ராஜா ராணி படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறாராம்.