×

ஆர்யாவுடன் நடிக்க மாட்டேன் - நயன்தாரா!!

பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று அடித்து சொல்லியிருக்கிறார் நயன்தாரா. அவரது இந்த நிராகரிப்பு மேற்படி பட நாயகன் ஆர்யாவுக்கு இடி விழுந்தது போல் ஆகிவிட்டதாம்.
இருப்பினும், நயன்தாரா இல்லாமல் ஒரு பாஸ் என்ற பாஸ்கரனா? அதை நினைத்துப் பார்க்கவே வெறுப்பாக உள்ளது. நான் எத்தனை படங்களில் நடித்திருந்தாலும், இன்றைக்கும் நயன்தாராவுடன் நடித்த இரண்டு படங்களையும் எனது நினைவுகளில் பசுமையாக வைத்திருக்கிறேன்.

அந்த அளவுக்கு அவருடன் நடிக்கிற போது ஒரு இனம் புரியாத ரொமான்டிக்கான பர்பாமென்ஸ் வெளிப்படும். அதனால் தான் அவருடன் மீண்டும் மீண்டும் நடிப்பதில் ஆர்வம் மிகுதியாக இருக்கிறேன் என்று தனது பீலிங்ஸை வெளிப்படுத்தி வருகிறார் ஆர்யா.