×

பாலாவை உருக வைத்த இளையராஜா!

இசைஞானி இளையராஜா கடந்த 38 ஆண்டுகளில் இதுவரை 999 படங்களுக்கு இசையமைத்து விட்டார். அவரது இசைப்பயணத்தில் 1000 மாவது படமாக பாலாவின் "தாரை தப்பட்டை" படம் இடம்பிடித்திருக்கிறது.
கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு உருவாகும் இந்த படத்தில் நாயகன் - நாயகியாக நடிக்கும் சசிகுமார்-வரலட்சுமிக்கு கரகாட்ட பயிற்சியை கொடுத்து வரும் பாலா, படத்திற்கு தேவையான பாடல்களையும் இளையராஜாவிடம் வாங்கி விட்டார். சின்னதும் பெருசுமாக மொத்தம் இப்படத்தில் 12 பாடல்கள் உள்ளதாம்.

பாடல்கள் ஒவ்வொன்றும் கேட்போரை உருவ வைப்பதாக உள்ளதாம். அதனால் எந்நேரமும் அப்பாடல்களை கேட்டு ரசித்துக்கொண்டேயிருக்கும் பாலா, சில ஆத்மார்த்தமான சினிமா கலைஞர்களையும் அந்த பாடல்களை கேட்க வைத்து தன்னைப்போலவே அவர்களையும் உருக வைக்கிறாராம். அந்த அளவுக்கு 1000-மாவது படத்திற்கு அற்புதமான பாடல்களை உருவாக்கி கொடுத்துள்ளாராம் இசைஞானி .