ஒவ்வொரு படம் முடிந்த பிறகும் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வழிபடுவதை ஒரு வழக்கமாக வைத்திருக்கின்றார் ரஜினிகாந்த். இதை முதல்முதலாக கடைபிடித்திருக்கிறார் அஜீத்.
அஜீத்தின் வீரம் படத்தின் படப்பிடிப்பு சென்ற சனிகிழமையோடு முடிந்துவிட்டது. அதனால் அஜீத்தும், இயக்குனர் சிறுத்தை சிவாவும் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டு மொட்டை அடித்தனர். முதல்முறையாக மொட்டை போட்டுள்ள அஜீத், பத்திரிகையாளர்களுக்கு சந்தோஷமாக போஸ் கொடுத்துள்ளார்.
வீரம் படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக முடிந்துள்ளதாகவும், அதனால் திருப்பதிக்கு வந்து வழிபட்டதாகவும், இந்த படம் தனக்கு மட்டுமின்றி தன்னுடன் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் ஒரு திருப்பத்தை கொடுக்க வேண்டியே தான் திருப்பதி சென்றதாகவும் அஜீத் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த பேட்டியின்போது இயக்குனர் சிறுத்தை சிவாவும் உடனிருந்தார்.
வீரம் படத்தில் அஜீத்துடன் தமன்னா, விதார்த், சந்தானம், அப்புக்குட்டி, மயில்சாமி ஆகியோர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை வெற்றி கவனிக்க விஜயா புரடொக்ஷன்ஸ் தயாரித்துள்ளனர். இந்த படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
