நிஜத்தில் மழைக்கு கூட கிச்சன் பக்கம் ஒதுங்காத அமலாபாலை தோசை சுட வைத்து வறுத்தெடுத்துவிட்டாராம் இயக்குனர்.
தற்போது அமலாபால் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அமலாபால் தோசை சுடுவது போன்ற காட்சியில் நடிக்க மிகவும் கஷ்டப்பட்டாராம் அமலாபால். கிச்சன் பக்கமே இதுவரை ஒதுங்கியிராத அமலாபாலுக்கு தோசை சுடுவது எப்படி என்றே தெரியவில்லையாம். உதவி இயக்குனர் ஒருவர் இவருக்கு இரண்டு நாட்கள் தோசை சுட கற்றுக்கொடுத்தாராம். அப்படியும் படப்பிடிப்பின்போது ஒரு தோசையை சுடுவதற்கு பத்து டேக்குகள் வரை தேவைப்பட்டதாம் அமலாபாலுக்கு.
ஒரு சாதாரண தோசை கூட சுடத்தெரியாமல் எப்படி இவரை வளர்த்தார்கள் என்று படப்பிடிப்பின்போது படக்குழுவினர் அவர் காதுபடவே கிசுகிசுத்து வந்ததால் ஒரு மாதத்தில் சமையலில் பெரிய ஆளாக மாறிக்காட்டுகிறேன் என்று படக்குழுவினர்களிடம் சவால் விட்டுள்ளாராம்.
