×

மீண்டும் பிரபுதேவாவை நெருங்கும் நயன் தாரா. அதிர்ச்சியில் சிம்பு!!

அக்னி நட்சத்திரம் படத்தில் ராஜாதி ராஜன் இந்த ராஜா என்ற பாடலில் அரிமுகம் ஆன பிரபுதேவா, பின்னர் டான்ஸ் மாஸ்டராக மாறி, வெற்றி கதாநாயகனாகவும் உருவெடுத்தார். பின்னர் போக்கிரி படத்தில் மூலம் தமிழில் வெற்றி இயக்குனராக அவதாரம் எடுத்தார். இதே படத்தை சல்மான்கானை வைத்து ஹிந்தியில் வாண்டட் என்ற படத்தை எடுத்து மெகா ஹிட் கொடுத்ததால் அவருக்கு பாலிவுட் படவாய்ப்புகள் குவிந்தன. ரெளடி ரத்தோர், ராமய்யா வஸ்தாவய்யா, ஆர்.ராஜ்குமார் போன்ற பாலிவுட் படங்களை எடுத்து முடித்துள்ளார். இதில் ராமய்யா வஸ்தாவய்யா, ஆர்.ராஜ்குமார் ஆகிய இரண்டு படங்களும் பாலிவுட்டில் சரியாக போகவில்லை. எனவே மீண்டும் கோலிவுட்டை நோக்கி வர முடிவுசெய்துள்ளார் பிரபுதேவா.
நயன் தாராவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகத்தான் பிரபுதேவா பாலிவுட் பக்கம் போனார். ஆனால் தற்போது வேறு வழியில்லாமல் கோலிவுட்டுக்கு மீண்டும் திரும்பியுள்ளார். தற்போது கோலிவுட்டுக்காக ஒரு அதிரடி ஆக்ஷன் திரைக்கதையை ரெடு செய்து வைத்துள்ளாராம். ஆனால் அவரது ஆஸ்தான ஹீரோ விஜய், தற்போது ஏற்கனவே வேறு படங்களில் நடித்து வருவதால் இவருக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலையில் உள்ளார். வேறு முக்கிய ஹீரோக்களும் பல்வேறு படங்களில் கமிட் ஆகியுள்ளதால் இந்த படத்திற்கு யாரை ஹீரோவாக்குவது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் பிரபுதேவா.
கடைசியாக கோலிவுட்டில் எங்கேயும் காதல், வெடி ஆகிய இரண்டு மொக்கை படங்களை கொடுத்ததால் இவரை நம்பி எந்த பெரிய நடிகரும் கால்ஷீட் கொடுக்க தயாராக இல்லை என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. ஆனால் ஹீரோயினாக நடிக்க நயன் தாரா தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. தொழில் வேறு, பர்சனல் பிரச்சனை வேறு என்ற கொள்கையுடன் தான் நயன் தாரா சிம்புவுடன் நடிக்க சம்மதித்து உள்ளார். அதுபோலவே பிரபுதேவாவின் இயக்கத்தில் நடிக்க அவர் தயாராக இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இந்த தகவல் சிம்புவை அதிர்ச்சியடைய செய்துள்ளதாம். சிம்பு நயன் தாராவின் பழைய காதலை கிளப்பி கடைசி நேரத்தில் விளம்பரம் செய்யும் ஐடியாவை பாண்டிராஜின் படக்குழுவினர் வைத்திருந்தனர். ஆனால் தற்போது பிரபுதேவா படத்தில் நடித்தால் சிம்பு, நயன் தாரா காதல் குறித்து விளம்பரம் செய்தால் அது எடுபடாது என்பதால் சிம்பு உள்பட படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.