| சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அமிதாப் பச்சன் பெயரில் விருது வழங்கப்படுகிறது. |
| கடந்த 2003ம் ஆண்டு முதல் மாநில அரசுடன் இணைந்து, இந்திய திரைப்பட திறனாய்வு கழகம், சென்னையில் சர்வதேசப் படவிழாவை நடத்தி வருகிறது. 7 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் 58 நாடுகளில் இருந்து 165 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. கடந்த ஆண்டு சென்னை திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அமிதாப் பச்சன், ரூ. 11 லட்சம் நன்கொடை அளித்து, இதை தமிழ் திரைப்பட ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளும்படி விழாக் குழுவைக் கேட்டுக்கொண்டார். எனவே அமிதாப்பச்சன் பெயரில் ‘YOUTH ICON OF THE YEAR’ என்ற தலைப்புடன் இளம் சாதனையாளர் விருதை அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். பணப் பரிசுடன் கூடிய இந்த விருது தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவீந்தருக்கு வழங்கப்படவுள்ளது. |
