×

குண்டுப்பெண்ணாக மாற ஆசைப்படும் தமன்னா!!

உடல் எடையை கூட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறாராம் தமன்னா.
ஒல்லிக்குச்சி உடம்போடு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் கலக்கி வருகிறார் தமன்னா.

இந்நிலையில் திடீரென உடல் எடையை கூட்ட தொடங்கியுள்ளார்.

 பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்வதற்காகவே இந்த முயற்சியை எடுத்துள்ளாராம்.

சமீப காலமாக பெரிய ஹீரோக்களுடன் நடிக்க தமன்னாவுக்கு வாய்ப்புகள் வருகிறது.

தமிழில் அஜித் ஜோடியாக வீரம் படத்தில் நடிக்கிறார். இது போல் தெலுங்கு படங்களிலும் மூத்த ஹீரோக்களுடன் ஜோடி சேரும் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த வாய்ப்புகளை தக்க வைத்து கொள்வதற்காகவே உடம்பை குண்டாக்க ஆசைப்படுகிறாராம் தமன்னா.