×

விபச்சாரி பெண்ணின் செல்போனில் பிரபல நகைச்சுவை நடிகரின் போன் நம்பர். கோலிவுட் அதிர்ச்சி. !!

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி. இவர் தூள், கில்லி, உள்பட பல தமிழ் திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். நேற்று இவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதில் பேசிய போலீஸ்காரர் ஒருவர் உங்களுடைய போன் நம்பரும், புகைப்படமும் விபச்சாரி பெண்ணின் செல்போனில் பதிவாகியுள்ளது. இதை யாருக்கும் தெரியாமல் மறைக்க வேண்டும் எனில் உடனடியாக ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என அந்த போலீஸ்காரர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிர்ச்சியடைந்த மயில்சாமி, தனக்கு எந்த விபச்சாரி பெண்ணுடனும் தொடர்பு இல்லையே அப்படி இருக்கும்போது தன்னுடைய நம்பர் எப்படி அந்த செல்போனில் இருந்தது என புரியாமல் ‘இது யாரோ தன்னை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவர் என முடிவு செய்து இன்று விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தனக்கு வந்த அழைப்பு குறித்து புகார் செய்தார்.
காவல்நிலையத்தார் மயில்சாமியிடம் இருந்த வந்த செல்போன் எண்ணை வாங்கிவைத்துக்கொண்டு அவருடைய புகாரையும் பெற்றுக்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். நகைசுவை நடிகர் ஒருவருக்கு வந்த மிரட்டலால் கோலிவுட் அதிர்ச்சியில் உள்ளது.