×

அஜீத் படத்தில் சிம்பு நடிக்கிறாரா? கோலிவுட்டில் பரபரப்பு.!!

சூர்யாவின் படம் டிராப் ஆனபிறகு அப்செட்டில் இருந்த கவுதம் மேனனை தூக்கி நிறுத்தியவர் அஜித்தான். அவரை அழைத்து ஆறுதல் கூறியதோடு, உடனே வேலைகளை ஆரம்பியுங்கள், வீரம் படத்தை முடித்தவுடன் நம் படத்தை ஆரம்பிக்கலாம் என்று தைரியம் கொடுத்தவர் அஜீத்தான். ஆனால் இந்த இடைவெளியில் சிம்புவை வைத்து ஒரு படத்தை எடுத்து முடிக்க கவுதம் மேனன் திட்டமிட்டு இருந்தார். இந்த படமும் தற்போது உறுதியாகிவிட்டது. சிம்பு, பல்லவி நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான இசையமைக்கிறார்.
மேலும் இந்த படம் முடிந்தவுடன் அஜீத் படத்தை துவக்க உள்ளார். ஆனால் தற்போது சில இணையதளங்களில் அஜித்தும், சிம்புவும் ஒரே படத்தில் நடிக்க இருப்பதாக சில தவறான செய்திகள் வந்துகொண்டிருப்பதாகவும், இதில் சிறிதும் உண்மையில்லை என்றும், இருவரையும் வைத்து தனித்தனியாகத்தான் படம் எடுக்க உள்ளதாகவும் கவுதம் மேனன் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
முதலில் இந்த செய்தியை கேட்டதும் சிம்புவுக்கே இன்ப அதிர்ச்சியாக இருந்ததாம். இவர் தல அஜீத்தின் வெறியர் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படி ஒரு செய்தி வந்ததும் கவுதம் மேனனிடம் சிம்பு சென்று, தல படத்தில் எனக்கு ஏதாவது ஒரு ரோல் கொடுங்களேன் என்று கேட்டுள்ளாராம். ஆனால் கவுதம் மேனன் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த படத்தில் நீங்கள் நடிக்கும் அளவுக்கு கேரக்டர் எதுவும் இல்லை. எதிர்காலத்தில் அதுபோன்று ஒரு ஸ்கிரிப்ட் அமைந்தால் கண்டிப்பாக உங்கள் இருவரையும் சேர்த்து படமெடுக்கிறேன் என்று சிம்புவிடம் கூறினாராம் கவுதம் மேனன்.