×

‘ஜிகர்தண்டா’வில் புதுவித மதுரை!!

ஜிகர்தண்டா’ படத்தில் புது மதுரையை காட்டப்போகிறாராம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
தமிழ்த் திரையுலகிற்கு சூடான ‘பீட்சா’வை சமைத்துக் கொடுத்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.


தற்போது ‘ஜில்' ஜிகர்தண்டாவை கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் கூறுகையில், ஜிகிர்தண்டா ஒரு ஆக்‌ஷன் டிராமா. மதுரையைச் சுற்றி நடக்கும் கதையில் சித்தார்த், லட்சுமி மேனன், சிம்ஹா, கருணா, இப்படி பல பேர் முக்கிய பாத்திரங்களைச் செய்திருக்கிறார்கள்.

மேலும் மதுரை என்றாலே இப்படித்தான் இருக்கும் என்ற எண்ணத்தை உடைக்கும் படம்தான் ஜிகிர்தண்டா என்றும் இந்தப் படத்தில் எல்லோரும் மதுரையைப் புதியதாகப் பார்ப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.