| ‘சட்டென்று மாறுது வானிலை’ பட தலைப்பால் பிரச்சனையை சந்தித்துள்ளார் கௌதம் மேனன். |
| கவித்துவமான, அழகான தமிழ் தலைப்புகளை வைத்து படங்களை இயக்கி வருபவர் கௌதம் மேனன். அருமையான இந்த டைட்டில் குறித்து படத்தின் நாயகன் சிம்பு கூட மகிழ்ச்சியாக டுவீட் செய்திருந்தார். ஆனால் இப்போது அந்த தலைப்புக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதாவது, சரவணரஜ் மூவி கம்பைன்ஸ் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் ரவிராஜ் என்பவர் கௌதம் மேனன் வைத்துள்ள ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற தலைப்பில் ஏற்கெனவே ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார். தணிக்கைக் குழுவினரால் இந்தப் படத்திற்கு 'U' சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதோடு, அரசாங்கம் வரிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கௌதம் மேனன் இயக்கும் படத்தின் டைட்டில் சட்டென்று மாறவுள்ளது. |
