×

சிம்பு - தனுஷ் கூட்டணி: கோடம்பாக்கத்தில் உலவும் செய்தி!!!

சிம்பு - தனுஷ் இணையப்போகிறார்கள் என்று கோடம்பாக்கத்தில் செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளன.
தமிழ் சினிமா உலகில் சிம்பு, தனுஷ் இருவரும் போட்டியாளர்கள் என்று ரசிகர்களால் சித்தரிக்கப்பட்டது.

ஆனால் அதை மாற்றும் விதமாக சில மேடைகளில் சிம்பு என்னை விட சிறந்த டான்சர் என்றெல்லாம் புகழ்ந்து பேசி வந்தார் தனுஷ்.

இப்போது சிம்பு, மற்றும் கொலவெறி அனிருத்துடன் லண்டனுக்கு ஜாலி டூர் சென்றுள்ளராம்.

ஆனால் அவர்கள் சென்றிருப்பது என்னவோ, ஒரு ரிலாக்சுக்காகத்தான் என்றாலும், அவர்களுடன் இசையமைப்பாளர் அனிருத்தும் சென்றிருப்பதால், சிம்பு-தனுஷ் இருவரும் இணைந்து நடிக்கப்போகும் படத்தின் இசைப்பணிகளுக்காகத்தான் லண்டன் சென்றிருக்கிறார்கள் என்று கோடம்பாக்கத்தில் வழக்கம்போல் வதந்தி பரவியுள்ளது.