×

டிசம்பரில் ‘நிமிர்ந்து நில்’ கீதம்!!

‘நிமிர்ந்து நில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 11ம் திகதி நடைபெறவுள்ளது.


சமுத்திரகனியின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துவரும் படம் நிமிர்ந்து நில். இந்தப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக அமலா பால், மேக்னா ராஜ் இருவரும் நடிக்கிறார்கள்.


மேலும் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

‘உன்னை நீ சரிசெய்து கொள், உலகம் தானாக சரியாகி விடும்’ என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் ஜெயம் ரவி.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 11ம் திகதி நடைபெற இருக்கிறது.