×

புறம் போக்கு யாரு? குபுக் சிரிப்பில் விஜய் சேதுபதி!!

தேசிய விருது பெற்ற இயக்குனர் எஸ்.பி ஜனநாதனின் புதிதாக இயக்கும் திரைப்படம் புறம்போக்கு.
தொடர் வெற்றி பட கதாநாயகர்களான ஆர்யா, விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தை யூடிவி மோஷன் பிக்சர்ஸ் வழங்க, எஸ்.பி. ஜனநாதன் தனது தயாரிப்பு நிறுவனமான பைனரி பிக்சர்ஸ் கம்பெனியின் முதல் தயாரிப்பாக பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

சமீபத்தில் நடந்த இப்படத்தின் விளம்பர படப்பிடிப்பில் ஆர்யா, விஜய் சேதுபதியை பார்த்து படத்திற்கு புறம்போக்கு என பெயர் வச்சிருக்காங்க!
“இதுல நான் புறம்போக்கா? இல்ல நீங்க புறம்போக்கா? என கேட்க... அதற்கு நான் கூட இருக்கலாம்! இல்ல நீங்களா கூட இருக்கலாம் என விஜய் சேதுபதி ஜாலியாக சொல்லிக் கொண்டிருக்கும் போது இயக்குனர் இடையே நுழைந்து பொதுமக்களுக்கு பயன்படுற எல்லாமும், எல்லாருமே புறம்போக்கு தான்” என்றார்.

இப்ப உங்க ரெண்டு பேர்ல யார் புறம்போக்குன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க என்றும் அவர் மேலும் கூற மொத்த யூனிட்டுமே சிரிக்கத் தொடங்கியது.

புறம்போக்கு படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் குலு மணாலியில் தொடங்குகிறது.