×

விஜய்யுடன் ஜோடி சேர ஆசைப்படும் ஹனிரோஸ்!!

இளையதளபதி விஜய்யுடன் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் உள்ளாராம் ஹனிரோஸ்.

மலையாளத்தில் சின்னச்சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்தவர் ஹனிரோஸ்.
தமிழில் சிங்கம்புலி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க, அந்தப்படமும் அவரது காலை வாரிவிட்டது. அதைத்தொடர்ந்து மீண்டும் மலையாள சினிமாவுக்கே போன அவருக்கு ராஜகம்பள வரவேற்பு தான்.

த்ரிவேண்ட்ரம் லாட்ஜ், ஹோட்டல் கலிபோர்னியா, அஞ்சு சுந்தரிகள் என வரிசையாக இவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் அடிக்க மலையாளத்தில் முக்கியமான நடிகையாகிவிட்டார்.

அதனால் இப்போது வரிசையாக இளைய தலைமுறை இயக்குனர்களின் படங்களால் நிரம்பிக் வழிகிறது ஹனிரோஸின் கால்சீட் டைரி.
மலையாளத்தில் இவ்வளவு பிஸியாக இருக்கும் ஹனிரோஸ் நம்ம இளைய தளபதி விஜய்யின் வெறித்தனமான ரசிகை.

எனவே விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற தனது ஆசையை தனக்கு நெருங்கிய வட்டாரங்களில் பரப்பி வருகிறாராம்.