| பரபரப்பான இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது ‘இது கதிர்வேலன் காதல்’ திரைப்படம். |
| ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள படம் இது கதிர்வேலன் காதல். இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார். சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள இப்படத்தின் ஒரு பாடல் தவிர மற்ற படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இப்போது படத்தின் டப்பிங் வேலைகளும் முடிந்து விட்டது. மீதமுள்ள பாடல் காட்சியின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. படத்தின் ஓடியோ வெளியீடு மற்றும் படத்தின் ரிலீஸ் திகதிகளை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர். |
