| ‘ஜித்தன்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருக்கிறது. |
| வின்சென்ட் செல்வா இயக்கத்தில் ஆர்.பி.சௌத்ரியின் மகன் ரமேஷ் கதாநாயகனாக நடித்த இப்படத்தின் வெற்றியை தொடர்ந்துதான் ரமேஷை ‘ஜித்தன்’ ரமேஷ் என்று அழைக்கத் தொடங்கினார்கள். இந்தப் படத்திற்குப் பிறகு மதுரை வீரன், புலி வருது, பிள்ளையார் தெரு கடைசி வீடு போன்ற பல படங்களில் நடித்த ஜித்தன் ரமேஷுக்கு அப்படங்கள் சொல்லும் படியான வெற்றியை கொடுக்கவில்லை. சமீபகாலமாக எந்தப் படங்களிலும் நடிக்காமல் இருந்த அவர் அடுத்து, ஜித்தன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருக்கும் ’ஜித்தன் 2’ படத்தில் நடிக்க இருக்கிறார். க்ரைம், த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை வசனத்தை வின்சென்ட் செல்வா எழுத, ராகுல் இயக்குகிறார். இந்தப் படத்தின் கதாநாயகி யார், இசை அமைப்பாளர் யார் என்பது போன்ற விடயங்கள் இன்னும் முடிவாகவில்லை. |
