×

ஹீரோவாக களமிறங்கும் விஜயகாந்த் வாரிசு!!


ஹீரோவாக களமிறங்குகிறார் விஜயகாந்தின் இளையமகன் சண்முகப் பாண்டியன்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த், தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்த பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

2010ல் விஜயகாந்த் இயக்கி நடித்த 'விருதகிரி' படத்தைத் தொடர்ந்து, அவரது நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை.

இந்நிலையில் விஜயகாந்தின் இளையமகன் சண்முகப் பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.

சகாப்தம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 12ம் தேதி தொடங்கவுள்ளது.

கேப்டன் சினி கிரியேஷன் நிறு‌வனத்தின் சார்பில் எல்.கே.சுதிஷ் தயாரிக்கும் இப்படத்தினை டி.இ.சந்தோஷ் ராஜன் இயக்குகிறார்.

இந்த படத்தின் பூஜை வரும் 12-12-2013 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சாலிகிரமத்தில் உள்ள ஆண்டாள் அழகர் இல்லத்தில் நடக்கிறது.

இதில் விஜயகாந்த், பிரேமலதா, பிரபல திரையுலகினர் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்