×

மம்முட்டி படத்தில் விஜய் நடனம் ஆட மறுத்தது ஏன்? மோகன்லால் காரணமா? திடுக்கிடும் தகவல்!!

ஜில்லா படத்தில் கிட்டத்தட்ட நடித்து முடிக்கும் நிலையில் இருக்கிறார் விஜய். அறிமுக பாடல் காட்சி ஒன்று மட்டும் எடுக்க வேண்டிய நிலையில் அந்த பாடல் காட்சியும் தற்போது பொள்ளாச்சியில் மிக பிரமாண்டமாக செட் போடப்பட்டு ஆயிரம் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்களுடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டி படத்தில் விஜய் ஒரு பாடல் காட்சியில் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளது. இதை கேள்விப்பட்டவுடன் ஜில்லா படத்தில் நடிக்கும் மோகன்லால் விஜய்யிடம் தனது வருத்தத்தை தெரிவித்தாராம். கேரளாவில் தனக்கும், மம்முட்டிக்கும் கடும் போட்டி நிலவுவதாகவும் தன்னுடன் நடித்துக்கொண்டிருக்கும்போதே, மம்முட்டியுடன் நீங்கள் டான்ஸ் ஆடினால் அது எனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறினாராம். மேலும் ஜில்லா படத்தின் கேரள உரிமையை மோகன்லால் வாங்கியிருப்பதால் இந்த வருத்தம் அதிகமானது என்பதை புரிந்து கொண்ட விஜய், மம்முட்டி படத்தில் டான்ஸ் ஆடும் முடிவை மாற்றிக்கொண்டாராம்.
விஜய் இன்று விடுத்துள்ள ஒரு அறிக்கையில் ஜில்லா படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் தொடர்ச்சியாக ஏ.ஆர். முருகதாஸ் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாக வேறு எந்த படத்திலும் நடனம் ஆடுவதற்கு கமிட் ஆகவில்லை என்றும் விளக்கியுள்ளார்.