| கன்னட உலகில் கால் தடம் பதிக்கப்போகிறாராம் த்ரிஷா. |
| கடந்த 10 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ரசிகர்களின் மனதில் நச்சென்று நங்கூரம் போட்டுள்ளார் த்ரிஷா. இதில் கதாநாயகனாக நடிப்பவர் கன்னட உலகின் பவர்ஸ்டார் என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் புனீத் ராஜ்குமார். இவருக்கு ஜோடியாக நடிப்பதற்குத்தான் த்ரிஷாவை அணுகி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இதற்காக மிகப்பெரிய தொகையை சம்பளமாகவும் தர தயாராக இருக்கிறார்களாம். அப்படி த்ரிஷா இந்தப்படத்தில் நடிக்கும் பட்சத்தில் கன்னடத்தில் அவரது முதல் படமாக இது இருக்கும். |
