×

துபாய் தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்த குத்து நடிகைக்கு மிரட்டல் விடுத்த தமிழ் நடிகர்!!

அஷ்டாவதான இயக்குனர் ஒருவரின் படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட தாஜ்மஹால் பெயரை தன்னுடன் கொண்ட நடிகை, பின்னர் கதாநாயகி வேடங்கள் எதுவும் கிடைக்காததால் குத்து நடிகையாக மாறினார். அதன் பின்னர் அதற்கும் போட்டி ஏற்பட்ட பின்பு, கலைநிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொண்டு சேவை செய்து வந்தார். இவர் அடிக்கடி துபாய்க்கு சென்று கலைச்சேவை செய்வதுண்டு.
இந்நிலையில் துபாயில் ஒரு மிகப்பெரிய தொழிலதிபருடன் பழக்கம் ஏற்பட்டு அது பின்னர் காதலாக மாறியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் பலமுறை துபாய் சென்று தன்னுடைய காதலை வளர்த்துள்ளார். இந்நிலையில் தற்போது இருவரும் ரகசிய திருமணம் செய்துவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. துபாயில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் முடிந்துவிட்டதாகவும், அங்கேயே நடிகை செட்டிலாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் அந்த நடிகை தன்னுடைய திருமண வரவேற்பை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளாராம். இந்நிலையில் இவரை ஒருதலையாக காதலித்து வந்த தமிழ் குணசித்திர நடிகர் ஒருவர், நடிகையை மிரட்டியுள்ளாராம். தன்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி நீ திருமணம் செய்யலாம். அந்த திருமணத்தை ரத்து செய்துவிட்டு உடனே என்னை திருமணம் செய்துகொள். இல்லையெனில் நாம் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும், வீடியோவையும், ஃபேஸ்புக்கில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அந்த நடிகை அதிர்ச்சியுடன் என்ன செய்வது என்று தெரியாமல் வருத்தத்துடன் உள்ளார்.