×

சர்வதேச திரைப்பட விழாவில் விஸ்வரூபம் 2 ?

கமலின் பிரம்மாண்ட படமான விஸ்வரூபம் 2 வின் பர்ஸ்ட் லுக் வெளியாகவிருக்கிறது.


இந்த ஆண்டு வெளியான படங்களில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த விஸ்வரூபம் திரைப்படம், ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் இடம் பிடித்தது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீயா வேலை செய்து கொண்டிருக்கிறார் கமல்ஹாசன்.


இதில் கமலுடன், ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். வாகை சூட வா புகழ் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.


தமிழ், ஹிந்தி என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இப்படத்தை கமல்ஹாசனோடு இணைந்து ஆஸ்கர் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார்.


சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் டிரைலரைப் பார்த்த பல முன்னணி சினிமா பிரபலங்கள், அவர்களது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் வலைதளங்களில் பாராட்டு மழையை பொழிந்துள்ளனர்.


இந்நிலையில் இந்த வருடம் சென்னையில் நடைபெறவுள்ள 11-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், இதன் டிரைலர் வெளியிடப்படலாம் என கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டு வருகிறது.


இவ்விழாவை வருகிற 12ஆம் தேதி கமல்ஹாசன் தான் துவங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.