ஐங்கரனிடம் ‘ஜில்லா’
விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது விஜய்யின் ஜில்லா.
விஜய், மோகன்லால், நேசன் கூட்டணியில் உருவாகியிருக்கும் ஜில்லா படத்தின் டப்பிங் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வர, படத்தின் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.
படத்தின் கேரள உரிமையை கேரள சூப்பர் ஸ்டார் மோகன் லால் பெற்றிருக்கும் நிலையில், ‘ஜில்லா’வின் வெளிநாட்டு உரிமையை பிரபல ஐங்கரன் நிறுவனம் பெற்றுள்ளது.
பொங்கலையொட்டி ஜில்லா ஜனவரி 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.