×

ஆரம்பமானது ஜெயம் ரவி- நயன்தாரா கூட்டணி!!

 ஜெயம் ரவியுடன், நயன்தாரா முதல்முறையாக ஜோடி சேரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்குகிறது.

இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. ஜெயம் ராஜா இயக்குகிறார். சொந்தத் தம்பியான ரவியை வைத்து அவர் இயக்கும் 6 வது படம் இது.

முற்றிலும் வித்தியாசமான கதைக் களத்தை கொண்ட இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

படப்பிடிப்பு, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு எதிரில் உள்ள பின்னி மில்லில் தொடங்குகிறது. இதற்காக அங்கு ஒரு ரெயில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்ட நயன்தாரா, ஜெயம் ரவியுடன் இணைவது இதுவே முதனமுறை என்பது குறிப்பிடத்தக்கது.