ஹாரிஸ் ஜெயராஜ் தனது துள்ளலான இசையில் உருவாகியிருக்கும் 'என்றென்றும் புன்னகை' படத்திற்கு மேலும் ஒரு வைரத்தை பதிக்கவிருக்கிறார்.
ஜீவா, த்ரிஷா, வினய், ஆன்ட்ரியா, சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை 'வாமனன்' அஹமத் இயக்கியுள்ளார்.
இதன் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தினை பார்த்த ஹாரிஸ் ஜெயராஜுக்கு படம் ரொம்பவும் பிடித்து போனதாம்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இன்னொரு பாடல் கூட இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதிய ஹாரிஸ், மீண்டும் ஒரு பாடலை உருவாக்கி அதற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் இந்தப் பாடலையும் நீங்க எல்லாரும் என்ஜாய் பண்ணுவீங்கன்னு நம்புகிறேன் என்று ட்விட்டியுள்ளார்.
Watch Endrendrum Punnagai - Official Trailer Music - Harris Jayaraj Lyrics - Karky Directed by - I. Ahmed Starring - Jiiva, Trisha, Santhanam, Vinay Rai, Andrea Jeremiah