×

ராணாவின் டார்கெட் அனுஷ்கா



நடிகர் ராணாவின் காதல் வலையில் சிக்கியுள்ளாராம் பொம்மாயி.
அனுஷ்காவும், ராணாவும் ‘ருத்ரமாதேவி’ படத்தில் இணைந்து நடிக்கின்றனர். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது.

இதன் படப்பிடிப்பில்தான் இவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் தனியாக உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசுகிறார்களாம். மேலும் இருவரும் காதலிப்பதாக டோலிவுட்டில் தகவல்கள் கசிந்துள்ளன.

ராணாவுடன் ஏற்கெனவே ஸ்ரேயா, த்ரிஷா, இலியானா, போன்றோர் இணைத்து பேசப்பட்டனர். இப்போது அந்த பட்டியலில் அனுஷ்காவும் சேர்ந்துள்ளார்.