×

ஜீவாவின் ‘யான்’ ஆன் தி வே!!


விரைவில் ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்கவருகிறது ஜீவாவின் 'யான்' திரைப்படம். பிரபல ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன் இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கி வரும் படம் ’யான்.

 ஜீவா, துளசி நாயர் ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். யான் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. 

இப்போது படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. 

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா வருகிற 15ம் திகதி சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது.