×

சென்சாரில் 'ஹாட்'டான பிரியாணி!

வெங்கட் பிரபுவின் பிரியாணி தணிக்கை குழுவினரின் கையில் சிக்கித் தவிக்கிறது.

கார்த்தியின் தொடர் சரிவுக்கு பின்பு சுடசுட தயாராகியுள்ளது பிரியாணி திரைப்படம். இப்படத்தில் ஹன்ஷிகா கார்த்தியோடு ஜோடி சேர்ந்துள்ளார்.

இவர்களுடன் பிரேம்ஜி, ராம்கி, சம்பத், சுப்பு பஞ்சு, சம்பத், ஜெயபிரகாஷ், மதுமிதா, நிதின் சத்யா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜாவின் பிரம்மாண்ட தயாரிப்பில் காமெடி த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

 யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் ஏற்கெனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிரியாணி யுவனின் இசையில் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், யு/ஏ சான்றிதழ் அளித்தனர்.

 இதனால் அதிர்ப்தி அடைந்த படகுழுவினர் யு சான்றிதழ் வாங்க மறுதணிக்கைக்கு அனுப்பினர்.

அப்படத்தினை பார்த்த மறுஆய்வு குழு, "படத்தில் இரட்டையர்த்த வசனங்கள் இருக்கிறது.

யு சான்றிதழுக்கு வாய்ப்பில்லை" என்று மறுத்துவிட்டார்கள். இதனால் அதிர்ச்சியில் இருக்கிறது படக்குழு. காரணம், U/A சான்றிதழ் என்றால் தமிழக அரசிடம் இருந்து வரிவிலக்கு கிடைக்காது.

இப்படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.