×

சட்டென்று மாறிய சிம்புவின் வானிலை!!

கௌதம் மேனன் படத்தில் டூயட் ஆட தயாராகி விட்டார் சிம்பு.
'துருவ நட்சத்திரம்' டிராப் ஆனதை தொடர்ந்து, கௌதம் மேனன் - சிம்பு இணையும் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

 தற்போது இப்படத்திற்கு 'சட்டென்று மாறுது வானிலை' என்று கவிதை வரியில் பெயரிட்டுள்ளனர்.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக பல்லவி சுபாஷ் அறிமுகமாகிறார்.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டான் மேக் ஆர்த்தர் ஒளிப்பதிவுக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

கடந்த மாதம் 12ஆம் தேதி தொடங்கிய இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இதன் இரண்டாம் கட்டமாக இசைப் புயலின் இசையில் உருவான பாடலின் படப்பிடிப்பு வருகிற 8ஆம் தேதி தொடங்குகிறது.

இப்படத்தை கௌதம் மேனன் தனது போட்டான் கதாஸ் நிறுவனம் மூலமாக தயாரித்து வருகிறார்.