×

பொம்மாயி காட்டில் அடைமழை!

‘பாக்மதி’ என்ற புதுப்படத்தில் கமிட்டாகியுள்ளதால் குஷியில் இருக்கிறாராம் அனுஷ்கா.

தெலுங்கில் ருத்ரம்மா தேவி, பாஹுபலி என சரித்திர கதைப் பின்னணியில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் படங்களில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்தப் படங்களை தொடர்ந்து ‘பாக்மதி’ என்ற ஒரு படத்தில் நடிக்கவும் கமிட் ஆகியிருக்கிறார்.

தெலுங்கில் ‘பில்லா ஜமீன்தார்’ என்ற படத்தை இயக்கிய அசோக் இயக்கும் இந்தப் படமும் பிரம்மாண்டமான முறையில் உருவாக இருக்கிறது.

ஆனால் இந்தப் படம் வழக்கமான கமர்ஷியல் என்டர்டெய்ன்மென்ட் படம் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.