×

ரொமான்ஸ் அஜித் ரிட்டர்ன்!

கௌதம் படத்திற்காக மீண்டும் ரொமான்ஸில் குதிக்கப்போகிறாராம் அஜித்.
அஜித் - கௌதம் மேனன் படம் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியானதோ அப்போதிலிருந்து ‘தல’ ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கௌதம் படம் என்றாலே ரொமான்ஸிற்கு கண்டிப்பாக முக்கியத்துவம் இருக்கும்.

ஆனால் அஜித் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தே பல வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக கிரீடம் படத்தில் த்ரிஷாவை காதலித்ததோடு சரி, அதன்பிறகு வந்த ஏகன் படத்தில் கூட நயன்தாராவை ஒரு ‘மிஷன்’ சம்பந்தமாகவே காதலிப்பதுபோல் கதை சொல்லியிருந்தார்கள்.

ஆனால் கௌதம் படத்திற்காக மீண்டும் அஜித் ரொமான்ஸில் குதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் இப்படம் ஆக்ஷன் கலந்த காதல் படமாக இருக்கும் என கௌதம் கூறியிருக்கிறார்.

அதனால் இப்படத்தில் ‘தல’ தன் உடம்பைக் குறைத்து, டை அடித்து பழைய ‘க்யூட்’ அஜித்தாக மாறப்போகிறாராம்.

இப்படத்திற்காக பிப்ரவரி 15ஆம் தேதி முதல் கால்ஷீட் தந்திருக்கிறாராம் அஜித்.