×

கவர்ச்சியா நடிக்கணும்னுதான் கூப்பிடுவாங்க, ஆனா நீங்க': 'வில்லங்க' ஹீரோயின்

கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் அறிமுகமான மீனாட்சி, சின்ன சின்ன இடைவெளிகளுக்கு பின்பு நடித்த கடைசி படம் கரு.பழனியப்பனின் மந்திரப்புன்னகை.

அதற்கு பின்பு மும்பைக்கே போய் செட்டில் ஆகிவிட்டார். அவரை தேடிப்பிடித்து தனது வில்லங்கம் படத்தில் நடிக்க வரவழைத்திருக்கிறார் இயக்குனர் ரா.நா.சரவணன்.

இவர் ஏற்கனவே விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘முகம் நான் அகம் நீ’ படத்தை இயக்கியுள்ளார்.

மும்பையிலிருந்து கிளம்பிய மீனாட்சி இப்படத்தின் போட்டோ ஷுட்டுக்குதான் நேரடியாக வந்து இறங்கினாராம்.

வரும்போதே மிகவும் கவர்ச்சியான உடையோடு அவர் வந்திறங்க, இங்கே அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உடைகள் எல்லாமே மூடிக் கொள்கிற ரகம்.

‘உங்களுக்கு கவர்ச்சியா போஸ் வேணாமா ?’ என்று மீனாட்சி கேட்க, ‘உங்களை ஆபாசமில்லாமல் காட்டப் போகிறேன் என்றாராம் இயக்குனர்.

'என்னை படத்தில் நடிக்க அழைக்கும்போதே கவர்ச்சியா நடிக்கணும்னு சொல்லிதான் எல்லா இயக்குனரும் கூப்பிடுவாங்க.

 ஆனால் நீங்க ரொம்ப வித்தியாசமான ஆளா இருக்கீங்களே!' என்று வியந்தாராம் மீனாட்சி.

வில்லங்கம் படத்தில் அவர் முன்பாதியில் உடல் இளைத்தும் பிற்பாதியில் பத்துகிலோ உடம்பை ஏற்றியும் நடிக்கப் போகிறார்.

மீனாட்சியின் இப்போதைய உடல் எடையை கருத்தில் கொண்ட சரவணன் செகண்ட் ஹாஃப் கதையைதான் முதலில் படம் பிடிக்கிறார். இதற்கப்புறம் பத்து கிலோ உடல் எடையை குறைக்கப் போகிறார் மீனாட்சி.

இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார் நந்தா. இவர் படம் குறித்து கூறுகையில், இதுவரை பனிரெண்டு படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டேன். இந்த கதையை கேட்டதும் இந்த படத்தை விடவே மனசில்லை என்கிறார். முக்கிய வேடத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கிறார்.

அன்றாடம் தினசரிகளில் வரும் உண்மை சம்பவம் ஒன்றை தழுவி இந்த கதையை உருவாக்கியிருக்கிறார் ரா.நா.சரவணன்.
இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.