×

இவன் வேறமாதிரியை கைப்பற்றிய விஜய்!!

'கும்கி' புகழ் விக்ரம் பிரபுவின் இவன் வேறமாதிரி திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமை அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது.

இப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக டெல்லி மாடல் அழகி சுரபி அறிமுகமாகியுள்ளார். கணேஷ் வெங்கட்ராம் மற்றும் 'தடையறத் தாக்க' வம்சி கிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா நிறுவனத்துடன் இணைந்து யு.டி.வி.மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை 'எங்கேயும் எப்போதும்' புகழ் சரவணன் இயக்கியுள்ளார்.

சத்யா இசையமைத்திருக்கும் இதன் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 13ஆம் தேதி கிட்டத்திட்ட 300 திரையரங்குகளுக்கு மேல் தமிழ்நாட்டில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இதன் சேட்டிலைட் உரிமையை அதிக விலைக்கு கைப்பற்றியுள்ளது விஜய் டிவி.

இப்படத்திற்கு தணிக்கை குழுவினரிடம் இருந்து எந்தவித கத்திரியுமின்றி 'யு' சான்றிதழ் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Making of Tamil action thriller Ivan Vera Maathiri, directed by M. Saravanan. Starring: Vikram Prabhu, Surabhi,