| அஞ்சலியின் ரகசிய திருமண எதிரொலியால் அவரை ஓரங்கட்ட ஆரம்பித்துவிட்டதாம் ஆந்திர சினிமா. |
| அஞ்சலியின் சினிமா பயணம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், திடீரென்று சென்னையிலுள்ள தனது சித்தி தனது சொத்துக்களை அபகரிப்பதாக சொல்லிக்கொண்டு ஆந்திராவுக்கு பெட்டி படுக்கையுடன் ஓடினார். இந்நிலையில் அஞ்சலிக்கு ரகசிய திருமணம் ஆகிவிட்டதால் அவர் திடீரென்று காணாமல் போய் விடுவார் என்று ஆந்திராவில் சில மாதங்களாகவே செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, தற்போது அஞ்சலியின் உடல்கட்டும் மானாவாரியாக பெருத்துக்கொண்டே செல்கிறதாம். முதல் பாகத்தில் தங்கச்சி மாதிரியும், இரண்டாம் பாகத்தில் அக்காள் மாதிரியும் உருமாறிக்கொண்டே செல்கிறாராம். இதனால் இனி இவர் கதாநாயகி வேடத்துக்கு செட்டாக மர்ட்டார் என்று அஞ்சலியை புதிய படங்களுக்கு புக் பண்ணயிருந்தவர்கள் இப்போது ஓரங்கட்ட ஆரம்பித்துள்ளார்களாம். |
