×

அழகுராஜா ஆப்பு: பிரியாணி ரிவீட்டு!!

அழகுராஜா கையை கடித்துவிட்டதால் நஷ்டஈடுக்கு தயாராகி விட்டார்களாம் விநியோகஸ்தர்கள்.

சமீபத்தில் வெளியான கார்த்தியின் அழகுராஜா படம் விநியோகஸ்தர்களை முக்காடு போட வைத்துவிட்டது.

இதனால் அதே நிறுவனமும், அதே நடிகரும் இணைந்த பிரியாணி இப்போது ரிலீசுக்கு தயாராகி விட்டதால் அழகுராஜா படத்தை வாங்கி நஷ்டப்பட்டவர்கள் ஒன்றுகூடி, பிரியாணியை குறைந்த விலைக்கு வாங்கி பழைய நஷ்டத்தை சரிகட்ட திட்டமிட்டிருக்கிறார்களாம்.

ஏற்கனவே படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நாள்முதல் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவித்த பிரியாணி ஒருவழியாக டிசம்பர் 20ம் திகதி ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது.