×

ஆர்யாவின் ‘மீகாமன்’ ஜோடி டாப்சி?

வெள்ளாவி தேவதைக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் ஆர்யா.

ஆரம்பம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் டாப்சி. இதன் மூலம் இவர்கள் இருவரும் நட்பிக்கான பாலத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டனர்.

அந்த நட்பின் அடிப்படையில் சிபாரிசுகளை முடுக்கி விட்டு வருகிறாராம் ஆர்யா.

தடையறத்தாக்க மகிழ்திருமேனி இயக்கத்தில் தான் நடிக்கும் மீகாமன் படத்திற்கு கதாநாயகி தேடப்பட்டு வந்தபோது டாப்சியின் அருமை பெருமைகளை சொன்ன ஆர்யா, சத்தமில்லாமல் அவரை அப்படத்தில் கமிட் பண்ணி விட்டாராம்.

இதனால் ஆர்யா போன்ற வெள்ளை மனசுக்காரர்களால் எப்படியேனும் டாப் நடிகையாகிவிடலாம் என்ற புதிய நம்பிக்கையில் உள்ளாராம் டாப்சி.