| 'கற்றது தமிழ்' ராம் தனது அடுத்த பயணமாக தரமணிக்கு சென்றுள்ளார். |
சமீபத்தில் வெளியான இப்படத்தின் வீடியோ பதிவு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பை நேற்று ஈ.சி.ஆரில் உள்ள ஒரு ரெஸ்டாரன்டில் தொடங்கியுள்ளனர். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ஐ.டி. கம்பெனிகளில் பணிபுரிபவர்களின் வாழ்க்கை மற்றும் காதலை மைய்யப்படுத்தி எடுக்கும் இப்படத்தை ஜே.எஸ்.கே. பிலிம்ஸ் சார்பில் சதீஷ் தயாரிக்கிறார். |
